அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளரை நியமித்தார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளரை நியமித்தார் ஜோ பைடன்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் லொயிட் ஒஸ்டினை தனது பாதுகாப்புச் செயலாளராக தேர்வு செய்துள்ளார்.

இதன்படி அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனுக்கு தலைமை வகிக்கும் முதல் ஆபிரிக்க அமெரிக்கராக 67 வயது ஜெனரல் ஒஸ்டின் பதிவாகவுள்ளார்.

ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகத்தின் தலைவராக இருந்த ஜெனரல் ஒஸ்டின், தாம் ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பதால் இந்தப் பதவியை ஏற்பதற்கு காங்கிரஸ் அவையின் உரிமை விடுப்பு ஒன்றை எதிர்பார்த்துள்ளார்.

தமது தேசிய பாதுகாப்புக் குழுவின் முத்த அதிகாரிகளின் விபரத்தை வெளியிட்டு இரண்டு வாரங்களின் பின்னரே பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதவியில் உள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்த பைடன் வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

No comments:

Post a Comment