பிரேசிலின் அமேசன் காடுகளில் 12 ஆண்டுகள் இல்லாத அளவில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ஜெயிர் போல்சோனாரோ பிரேசில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின், காடுகள் அழிக்கப்படுவது அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதனால் சுற்றுச் சூழலுக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமேசன் காடுகளில் அழிக்கப்பட்ட வனப்பகுதி 9.5 வீதம் அதிகம் என்று அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியது. அழிக்கப்பட்ட இடம் லண்டன் நகரைப் போன்று 7 மடங்காகும்.
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் அழிக்கப்படுவது கவலை தருவதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய மழைக் காடான அமேசனைப் பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.
போல்சனாரோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கி, வர்த்தக ரீதியான விவசாயத்தையும், சுரங்கப் பணிகளையும் ஊக்குவிப்பதாகக் குறை கூறப்படுகிறது.
பிரேசிலை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்ற அவ்வாறு செய்வதாக அவர் கூறி வருகிறார். அதனால், தற்போது அங்கு பண்ணையாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், நில அபகரிப்பில் ஈடுபடுவோர் ஆகியோர் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment