சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கமைவாக புகையிரத சேவைகள் ஆரம்பம் - தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் நிறுத்தப்படாது - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கமைவாக புகையிரத சேவைகள் ஆரம்பம் - தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் நிறுத்தப்படாது

சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி நாளை (16 ஆம் திகதி) தொடக்கம் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் று.னு. ரஞ்சித் பத்மலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த புகையிரதங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் வலய பிரதேசங்களில் நிறுத்தாது செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதற்கமைவாக கீழ் குறிப்பிடப்பட்ட எந்தவொரு புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச புகையிரத நிலையங்களுள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மாத்திரம் அனைத்துப் புகையிரதங்களும் நிறுத்துவதற்கும் மற்றும் பயணங்களை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதான புகையிரத பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் பொல்கஹவல / ரம்புக்கன / கண்டி / கனேவத்த / மஹவ வரை

• மருதானை புகையிரத நிலையம்
• தெமட்டகொட உப புகையிரத நிலையம்
• களனி புகையிரத நிலையம்
• வனவாசல உப புகையிரத நிலையம்
• எந்தேரமுல்ல உப புகையிரத நிலையம்
• ஹொரப்பே உப புகையிரத நிலையம்
• ராகம புகையிரத நிலையம்
• வல்பொல உப புகையிரத நிலையம்
• பட்டுவத்த உப புகையிரத நிலையம்

சிலாபம் புகையிரத பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் சிலாபம் / புத்தளம் வரை

• பேரலன்த உப புகையிரத நிலையம்
• ஜா-எல புகையிரத நிலையம்
• துடெல்ல உப புகையிரத நிலையம்
• குடஹகபொல உப புகையிரத நிலையம்
• குரண புகையிரத நிலையம்
• நீர்கொழும்பு புகையிரத நிலையம்
• கட்டுவ உப புகையிரத நிலையம்

களனிவெளி புகையிரத பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் கொஸ்கம / அவிஸ்சாவெள்ள வரை

• பேஸ்லைன் வீதி புகையிரத நிலையம்
• கொட்டா வீதி உப புகையிரத நிலையம்

கரையோரப் புகையிரத பாதை - கொழும்பு கோட்டை தொடக்கம் பானந்துறை / களுத்தறை / அளுத்கம / ஹிக்கடுவ / காலி / மாத்தறை / பெலிஅத்த வரை

• செயலகம் உப புகையிரத நிலையம்
• கொம்னித்தெரு புகையிரத நிலையம்
• அங்குலான புகையிரத நிலையம்

அனைத்து புகையிரத பயணிகளும், சுகாதாரப் பிரிவின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment