மார்க்க அறிஞர்களை தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்திய முபாறக் ஹஸ்றத் அவர்களின் சேவை மிகப் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது : அல்- மீஸான் பௌண்டஷன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

மார்க்க அறிஞர்களை தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்திய முபாறக் ஹஸ்றத் அவர்களின் சேவை மிகப் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது : அல்- மீஸான் பௌண்டஷன்

முஸ்லிங்களின் தலைமை அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய பொதுச் செயலாளரும், மகரகம கபூரிய்யா அறபுக்கல்லூரியின் அதிபருமான அல்ஹாஜ் அஷ்சேக் எம்.எம்.எம்.முபாறக் ஹஸ்றத் அவர்கள் இன்று காலமானார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்) எனும் செய்தி மிகவும் கவலையானஒன்றாகும் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.

அவ் இரங்கல் செய்தியில் மேலும் பல பிரதேசங்ககளையும் சேர்ந்த உலமாக்கள், மார்க்க அறிஞர்களை தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்திய அன்னாரின் சேவை மிகப் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது. அசாதாரண காலப்பகுதிகளில் இந்த நாட்டு முஸ்லிங்களை வழிநடத்த இவரின் பங்கு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருந்தது. மார்க்கப்பணிகளை சிறப்பாக செய்தது மட்டுமின்றி மகரகம கபூரிய்யா அறபுக்கல்லூரியின் அதிபராக இருந்து பல உலமாக்களை உருவாக்கிய ஒருவராக இவரை காண்கிறோம் இவர் இன்று எம்மை விட்டு பிரிந்திருக்கிறார் எனும் செய்தி மிக கவலையாக உள்ளது.

சிறந்த மார்க்க அறிஞராக இருந்து பல ஆலிம்களை உருவாக்கிய மூத்த மார்க்க அறிஞரான எம்.எம்.எம். முபாறக் ஹஸ்றத் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அவரின் சமூக பணிகளையும் மார்க்க பணிகளையும் இறைவன் பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்கிட இருகரம் ஏந்தி பிராத்திக்கிறோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உலமாக்கள், குடும்பத்தார்கள், அவரின் நண்பர்கள், முஸ்லிங்கள் எல்லோருக்கும் இறைவன் திடமான இதயத்தை வழங்கிட எங்களின் பிராத்தனைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment