தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும் போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும். அதற்கு தடை விதிப்பது தமிழா்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும் எனவே அரசாங்கம் இந்த தடைகளை அடுத்த சில நாட்களில் அகற்ற வேண்டும். அதற்கான கோரிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பதிலளிக்க வேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழா் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடா்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். தூதுவா்கள் மனித உரிமை செயற்பாட்டாளா்களுக்கு உண்மை உணா்த்தப்படும். என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கியஸ்த்தா் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளாா்.
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட அரசின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளை கண்டிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட் டில் இயங்கும் கட்சிகள் இணைந்து நேற்று நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன.
இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீா்மானம் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் போராளிகள் உயிா் தியாகம் செய்துள்ளனா். அவா்களை அஞ்சலிப்பதும் நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உரிமையும் கடமையுமாகும். அதற்கு எதிராக தடைபோடுவது தமிழா்களின் உரிமையை மறுதலிப்பதாகவே அமையும்.
எனவே அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் நிரகரிக்கிறது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இவ்வாறான தடை உத்தரவுகளை நீக்க வேண்டும். திலீபனுக்கு மட்டுமல்லாமல் போராளிகளையும் பொதுமக்களையும் நினைவு கூருவது எங்கள் கடமையும் உரிமையுமாகும். அதனை பயங்கரவாதம் என கூறி தடை செய்வது ஏற்புடையதல்ல.
இந்தக் கூட்டத்தில் சில தீா்மானங்களை எட்டியிருக்கின்றோம். பிரதானமாக தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக நினைவேந்தல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் நீக்கப்ப டவேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்ககூடாது என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளோம். அதற்கு எமக்கு பதில் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் இதனை செய்யுமா? செய்யாதா? என்பதற்கு அப்பால் எமக்கு பொருத்தமான பதில் வழங்கப்பட வேண்டும்.
பதில் வழங்காவிட்டால் அல்லது இந்த விடயத்தில் பொறுப்பான பதில் வழங்கப்படாவிட்டால் தமிழா் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
அந்த வழிக்குள் எங்களை அரசே தள்ளுகின்றது. அதனை நாங்கள் தூதுவராலயங்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளா்களுக்கும் சொல்லுவோம் என்றாா்.
இதேவேளை இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமை தொடா்பாக கேட்டபோது அவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்கள் கலந்துகொள்ளவில்லை. எனினும் இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடா்பாக அவா்களுடன் தொடா்ந்தும் பேசுவோம் என்றாா்.
No comments:
Post a Comment