8 லட்சம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா - திணறும் உலக நாடுகள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 21, 2020

8 லட்சம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா - திணறும் உலக நாடுகள்

F Street Station added to exposure location list
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 649 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 5 ஆயிரத்து 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 2 ஆயிரத்து 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,79,153
பிரேசில் - 1,13,454
மெக்சிகோ - 59,106
இந்தியா - 54,849 
இங்கிலாந்து - 41,405
இத்தாலி - 35,427
பிரான்ஸ் - 30,503
ஸ்பெயின் - 28,838
பெரு - 27,034
ஈரான் - 20,376

No comments:

Post a Comment