யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருக்கு சொந்தமான பணமே இவ்வாறு யாசகரின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. 

இந்த யாசகரின் பெயரில் அத்திடிய தனியார் வங்கி ஒன்றில் கணக்குத் திறந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. 

வங்கிப் புத்தகம் மற்றும் வங்கி அட்டை மர்வினின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாசகரின் கணக்கிற்கு கடந்த 11 மாதங்களில் 1400 இலட்சம் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளது. மர்வின் ஜானா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment