எதிர்வரும் 29 ஆம் திகதி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 20, 2020

எதிர்வரும் 29 ஆம் திகதி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அமைச்சு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கும் இடையிலான கலந்துரையாடல் முல்லைத்தீவு பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கடலட்டை பிடிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் தடை செய்யப்படுவதை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி தீர்மானம் மிக்க கலந்துரையாடலை நடத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment