உலகையே உலுக்கிவரும், கொரோனாவிற்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க சுமார் 9 முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று மைக்ரோ சொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'கொரோனாவுக்கான சரியான தடுப்பு மருந்துதான் உலக மக்களை அமைதியான பாதுகாப்பான வாழ்க்கைக்கு கொண்டு செல்லும். பல மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் சரியான மருந்தினை கண்டுபிடிக்க 9 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும்.
தற்போது கொரோனாவுக்கு பரிந்துரை செய்யப்படும் தடுப்பு மருந்துகள் சிறந்த பலன் கொடுப்பவையாக இல்லை. பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் உயிர்களை காப்பாற்றும் ஆனால் நம் அனைவரையும் அது பழைய பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருமா என்பதுதான் கேள்வி.
கொரோனாவுக்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாதவரை உலகில் உள்ள அனைவரும் கொரோனாவிடமிருந்து பாதுகாப்பு இல்லாதவர்களாக தான் இருப்போம் என்றார்.
மேலும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், கொரோனாவுக்கான சிறந்த, பாதுகாப்பான மருந்தினை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அந்த மருந்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் அனைத்து பாகங்களுக்கும் விரைவில் சென்றடைய வேண்டும்.
இது மாதிரியான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு 5 வருடங்கள் ஆகலாம். ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்து இன்னும் 9 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளில் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவதாக பில் கேட்ஸ் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment