கொவிட் - 19 நிவாரணப் பணிக்காக சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது பங்களிப்பாக 500 அரிசிப்பைகளை வழங்கி வைத்தார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

கொவிட் - 19 நிவாரணப் பணிக்காக சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது பங்களிப்பாக 500 அரிசிப்பைகளை வழங்கி வைத்தார்

உலகலாவிய ரீதியில் கொறோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து மனிதம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் எமது நாட்டின் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள வறுமையைக் குறைத்து தொடர்ந்து வரவிருக்கும் சங்கை மிகு றமழானில் எமது பிரதேச வாழ் மக்கள் நிம்மதியுடன் நோன்பை நோற்பதற்காகவும் ஸக்காத் நிதியம் மற்றும் ஜம்மியதுல் உலமா சபை இணைந்து எடுத்துள்ள முயற்சிக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது பங்களிப்பாக 500 அரிசிப்பைகளை வழங்கி வைத்தார்.

மேலும், இம்முயற்சிக்கு யாரெல்லாம் பங்களிப்புச் செய்தார்களோ அல்லாஹ் அவர்களின் பொருளாதாரத்தை மென்மேலும் விருத்தியாக்க வேண்டுமெனப் பிரார்த்தித்ததுடன், இது முடியுமானவரை வறுமைப்பட்ட குடும்பங்களுக்குச் சென்றடைய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், எமது இஸ்லாமியப் பண்பாட்டு விழுமியங்களை நெறிப்படுத்தும் ஜம்மியத்துல் உலமாவுக்கும், ஸக்காத் நிதியத்துக்கும் தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர், ஸக்காத் நிதியத்தின் தலைவர், ஓட்மாவடி வர்த்தக சங்கத்தின் தலைவர், வாழைச்சேனை வர்த்தக சங்கத்தின் தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய சில அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக, சமூக அமைப்பின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.றிஸ்வி இச்சேவைக்கு உதவிகளை வழங்கியமைக்காக அமைப்பு சார்பாக நன்றிகளைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment