மட்டகளப்பு பல்கலைக்கழகத்தை கொரோனா வைரஸ் நிலையமாக மாற்ற எடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது - முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

மட்டகளப்பு பல்கலைக்கழகத்தை கொரோனா வைரஸ் நிலையமாக மாற்ற எடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது - முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கண்டனம்

வெளிநாட்டு நிதியை கொண்டு மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்கலைக்கழகத்தை கொரோனா வைரசுக்கான சிகிச்சை நிலையமாக மாற்ற எடுக்கும் அரசின் நிலைப்பாடானது கண்டிக்கத்தக்க செயலாகும் என முன்னாள் இராஜாங்க அமைசர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில் இப்பல்கலைக் கழகமானது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அதை இவ்வாறு கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையமாக மாற்ற முயற்சிப்பதானது வருந்ததக்கது.

எமது நாட்டில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டடத் தொகுதிகள் இருக்கின்ற நிலையல் இந்த பல்கலைக் கழகத்தை அரசு தெரிவு செய்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்

மேலும் இதை இங்கு அமைக்க அரசு எடுத்த முடிவானது அதை அண்மித்து வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் தென்னிலங்கை இனவாத கும்பல் இப்பல்கலைக் கழகத்தை தடை செய்ய கோரி பல கடும்போக்கு செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அரசாங்கம் இவ்வாறான அறிவித்தலை விடுத்திருப்பதானது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து இனவாதிகளுக்கு தீனி போடுவதற்கு முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

ஆகவே இதை அரசாங்கம் இப்படியான ஒரு இடத்தில் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு வேறொரு இடத்தில் அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment