உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைப் பெண்கள் (2020) விருது வழங்கும் நிகழ்வு நந்தவனம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் ஞாயிறு 8ஆம் திகதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது.
இந் நிகழவில் மகளிர் தின சிறப்பிதழின் முதல் பிரதியை சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட புரவலர் ஹாசிம் உமர் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் சாதனை விருதும் சான்றிதழ்களையும் பெற்றவா்களான ஜீவராணி ராஜிகுமார் (வவுனியா) பாத்திமா ஸிமாரா அலி (கொழும்பு) பாத்தியா றிஸ்வானா (பண்டாரவளை) காயத்ரி ஜோசப் நகுலன் (மட்டக்களப்பு) புஷ்பராணி சத்தியா (கொழும்பு) ஆகியோர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் திறைப்பட இயக்குநா் அகத்தியன், கனடா தமிழ் யுனிவாஸ் நிறுவனா் நரேந்திரா விவேகானந்தா, நந்தவனம் நிறுவனா் சந்திரசேகரன், செயலாளா் சாதிக்பாட்சா, கவிஞா் பா.தென்றல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தகவல் இம்ரான் நெய்னார்
No comments:
Post a Comment