சிறுவனின் உடலில் இருந்த 11 ஊசிகளில் 8 மீட்பு : எஞ்சியவை முக்கியப் பகுதியில் சிக்கியிருப்பதால் சிக்கலில் வைத்தியர்கள்..! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 8, 2020

சிறுவனின் உடலில் இருந்த 11 ஊசிகளில் 8 மீட்பு : எஞ்சியவை முக்கியப் பகுதியில் சிக்கியிருப்பதால் சிக்கலில் வைத்தியர்கள்..!

இந்திய தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் உடலில் 11 ஊசிகள் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் அன்னபூர்ணா தம்பதியரின் 3 வயது மகன், நீண்ட நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

அப்போது எக்ஸ்ரே மூலமாக சிறுவனின் உடலை பரிசோதித்த போது, உடலில் ஊசிகள் தென்பட்டுள்ளன. ஊசிகளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டனர். 

மேலும், சிறுவனின் உடலில் மொத்தம் 11 ஊசிகள் இருந்ததாகவும் அதில் 8 ஐ மட்டுமே அகற்ற முடிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மீதமுள்ள 3 ஊசிகளும் உடலின் முக்கிய பாகங்களில் சிக்கிக் கொண்டிருப்பதால் அதை அகற்றுவதில் சிக்கல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இது குறித்து சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்களான இருவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன்பேரில் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment