சீனாவுக்கான ஶ்ரீலங்கன் விமான சேவைகள் மட்டுப்பாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2020

சீனாவுக்கான ஶ்ரீலங்கன் விமான சேவைகள் மட்டுப்பாடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான அதன் சேவைகளை மட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.

கொரோன வைரஸ் பரவுவதால் கொழும்பில் இருந்து சீனாவுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்ளும் மூன்று நகரங்களுக்கான விமான சேவைகள் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள காரணத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் நகரங்களுக்கான விமான சேவைகளை, நாளைமுதல் (06) மார்ச் 28 வரை மட்டுப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பீஜிங்கிற்கான வாராந்ந்த விமான சேவைகளிகளின் எண்ணிக்கை 4 இலிருந்து 2 ஆகவும், ஷங்காய்க்கான சேவைகள் 4 இலிருந்து 2 ஆகவும்; கென்டனுக்கான சேவைகள் 7 இலிருந்து 3 ஆகவும் குறைக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் சீனாவுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment