எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்-இஸ்லாஹ் அமைப்பின் சுதந்திர தின நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடியில் மூன்று கட்டங்களாக இடம் பெற்றது.
அல் இஸ்லாஹ் அமைப்பின் தலைவர் ஆ.அனீஸ் அஹமட் தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பேன்ட் வாத்திய குழுவினரால் தேசிய கீதம் ஒலிக்கப்பட நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஜாபிர் கரீம், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எச்.எம்.ஹலீம் இஸ்ஹாக், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்களான இப்ராஹிம் மற்றும் றியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் இரண்டாம் நிகழ்வாக அல் இஸ்லாஹ் அமைப்பினால் சமூகவலைத்தளம் வாயிலாக நடாத்தப்பட்ட சுதந்திரதின கவிதைப் போட்டியின் சுமார் 350 போட்டியாளர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு வெற்றியாளர்களுக்கான "ISLAH the POET" விருது வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமான சுதந்திர தின நடைபவனி, தாகசாந்தி வழங்கும் நிகழ்வு மற்றும் வாகனங்களுக்கு சுதந்திர தின ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்து ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் வரை இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதான சந்தையிலிருந்து வாழைச்சேனை மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாயல் ஊடாக ஓட்டமாவடி தேசிய பாடசாலை வரை சுதந்திர தின வாகன பவனி இடம்பெற்றதும் குறிப்பிட்டத்தக்கது.
No comments:
Post a Comment