வவுனியா A9 வீதியில் கோர விபத்து - மாணவன் உட்பட மூவர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2020

வவுனியா A9 வீதியில் கோர விபத்து - மாணவன் உட்பட மூவர் படுகாயம்

வவுனியா கண்டி வீதியில் இன்று (05) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி வாகனத்தை செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியுடாக பயணித்துக் கொண்டிருந்த இரு துவிக்கர வண்டி மீது பட்டா ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் இரு துவிச்சக்கர வண்டிகளும் பட்டா ரக வாகனத்தின் சில்லினுள் அகப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பட்டா ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(கோவில்குளம் நிருபர் - காந்தன் குணா)

No comments:

Post a Comment