தேர்தல் காலத்தில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக தமது கடமைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களுடன் காணப்படும் தனிப்பட்ட குரோதங்களையும் விரோதங்களையும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான முகாந்திரமாக கொள்ளக் கூடாது.
அவற்றை தீர்த்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சுதந்திர ஊடக செயற்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தப்படக்கூடாது.
இந்த பின்னணியில் எமது போரத்தின் தலைவர் எம்.எஸ். சஜி அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் ஏற்படக்கூடாது என நாம் விரும்புகிறோம். ஊடகவியலாளர்கள் தமது பணிகளின் போதும் எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் தாக்கப்பட்டாலும் காத்தான்குடி மீடியா போரம் கண்டிக்க ஒரு போதும் தயங்கப்போவதில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment