ஏப்ரல் 21 தாக்குதல் - எதிர்வரும் 14ஆம் திகதி வரை பொதுமக்கள் ஆணைக்குழுவில் முறையிடலாம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

ஏப்ரல் 21 தாக்குதல் - எதிர்வரும் 14ஆம் திகதி வரை பொதுமக்கள் ஆணைக்குழுவில் முறையிடலாம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்புலம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். 

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் த சில்வாவின் தலைமையிலான இக்குழுவின் உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்சங்க பந்துல குணரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜகருணா, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியரசர் பந்துல குமார அத்தப்பத்து மற்றும் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் ஏ.எம்.ஆர்.அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இக்குழுவுக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எதிர்வரும் 14ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியுமென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் அறிவித்துள்ளார். 

முதலாம் மாடி, 5ஆம் புளொக், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பவும், நேரில் சமர்ப்பிக்கவும் முடியும். 

அத்துடன், 0112669135 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் 0112677673 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை தெரிவிக்கவும் அனுப்பவும் முடியும்.

No comments:

Post a Comment