500 பாடசாலை கட்டடங்களை ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 8, 2019

500 பாடசாலை கட்டடங்களை ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 10,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் 500 ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

நாளை (09) திங்கட்கிழமை  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கஹதுடுவ வெனிவெல்கொல சிஷ்யோதா விசேட கல்வி மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகத்தில் நடைபெறவுள்ளது. 

இதன்படி இந்த நிகழ்வுடன் நாடுபூராகவும் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் நாளைய தினம் மாணவர்களிடம் கையளிக்கப்படும்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டமானது 65,000 மில்லியன் ரூபா முதலீட்டில் 18,000 செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் இதன்மூலம் 9064 பாடசாலைகள் பயனடைகின்றன. 

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 200 பாடசாலை கட்டடங்களும் இரண்டாம் கட்டமாக 250 பாடசாலை கட்டடங்களும் ஒரே நாளில் பாடசாலை கட்டமைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

இந்நிலையில் நாளை (09) திங்கட்கிழமை 500 பாடசாலை கட்டடங்கள் ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment