நாடு முழுவதும் இன்று (13) இரவு 9.00 மணி முதல் நாளை (14) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரையும் கம்பஹாவில் நாளை (14) அதிகாலை 6.00 மணி வரையும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment