கம்பஹா பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் நிலவும் நிலைமையை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அந்த வகையில் மினுவங்கொட, தொம்பே கனமுள்ள, கிரிடிவெல, மீரகம, நிட்டம்புவ, பூகோட, வேயங்காடா, வெலிவேரிய, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment