இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்கின்றோம் - எம்.ஏ. சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்கின்றோம் - எம்.ஏ. சுமந்திரன்

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இதில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் வரவேற்கிறோம். இலங்கையுடைய விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலயத்தின் மேற்பார்வையின் கீழ் இறுக்கமான கால வரையறை வழங்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். 

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு இணங்கக் கூடிய ரோம் சட்டத்துக்கு இலங்கை இணங்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். 

பாதுகாப்பு சபையூடாக இந்த விடயங்களை கையாள முடியாது. அவ்வாறு முடியும் என்று கூறுபவர்கள் அதனை செய்யலாம். நாங்களும் அதனை வரவேற்போம். 

இந்த வருடமும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழு தான் எமக்கு இருக்கின்ற பலமான பொறிமுறை. ஆகவே அந்தப் பொறிமுறையை விலக்கிக் கொள்வது கூடாது. 

இலங்கை ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் உள்ளடக்கங்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்வதன் காரணமாக புதிய தீர்மானத்தில் ஒரு கால அட்டவணை கொடுப்பது பற்றி இந்த நாடுகள் ஆராய வேண்டும் என்பது எமது கோரிக்கை என்று எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment