பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாகவே கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் நடைபெற்ற ‘பொறுத்தது போதும்’ பொதுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.
அதற்கு பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளே காரணமாகும். கூட்டணி அமைப்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வரும் வரையில் பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லையென கட்சி தீர்மானித்தது. இதனாலேயே நாம் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை எனக்கு குறித்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் தீர்மானத்தினைக் கருத்திற் கொண்டு அதில் கலந்துகொள்ளவில்லை” என எஸ்.பி. திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment