சிறப்பாக இடம்பெற்ற அஷ்ஷஹீத் அஹமது லெப்பை நினைவு சிறப்பு முத்தாரம் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

சிறப்பாக இடம்பெற்ற அஷ்ஷஹீத் அஹமது லெப்பை நினைவு சிறப்பு முத்தாரம் நிகழ்வு

எம்.பஹ்த் ஜுனைட்
காத்தான்குடியின் முன்னாள் பட்டின சபை தலைவராகவும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஸ்தாபகருமான அஷ்ஷஹீத் அஹமது லெப்பை அவர்களின் 31 ஆவது நினைவு தின சிறப்பு முத்தாரம் நிகழ்வு சம்மேளனத்தின் கலை கலாச்சார பேரவையின் தலைவர் மெளலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) தலைமையில் வெள்ளிக்கிழமை (8) சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடியின் மிகப்பெரும் தலைமையாக விளங்கி அரசியல், சமூக சேவை, மார்க்கப் பணிகள் என எல்லா விடயத்திலும் தன்னை அர்பணித்து சேவையாற்றிய மாபெரும் தலைவர் அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஹாஜியார் அவர்களை நினைவு படுத்தும் இச்சிறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் ஊர் தலைமகளினால் அன்னாரின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புரையாற்றப்பட்டதுடன் சிறப்பு பட்டிமன்ற நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி ஆதம்லெப்பை (பலாஹி), சம்மேளனத்தின் பிரதித் தலைவர் அப்துல் ஜவாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.சிப்லி பாறுக், நகர சபை உறுப்பினர் இல்மி அஹமட் லெப்பை மற்றும் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment