ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

பொலன்னறுவை மாவட்டத்தில் அரச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சியை வழங்க வட மத்திய மாகாண சபை கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமன்கடுவ, திம்புளாக்கல, மெதிரிகிய, ஹிங்குராங்கொட, லங்காபுர, எலஹர ஆகிய கல்வி வலயங்களில் இயங்கிவரும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆறு மாத காலம் வரை இந்த ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படவுள்ளன. 

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இப்பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment