தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழை விநியோகிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழை விநியோகிக்க நடவடிக்கை

தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழை விநியோகிக்க தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தயாராகிறது. இதன்கீழ், ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு அமைய தரமான தேங்காய் எண்ணெய்க்காக லேபிள் ஒட்டப்படவுள்ளது. 

தேங்காய் எண்ணெய் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத் திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை மேற்கொள்வதாக அதிகார சபையின் தலைவர் உதய ரூபசிங்க தெரிவித்தார். 

அசுத்தமான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் இடங்கள் தொடர்பில் 011 2502501 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

அவ்வாறான உற்பத்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மனித நுகர்வுக்கு பொருத்தமல்லாத தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment