தீயணைப்புச் சேவையின் தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

தீயணைப்புச் சேவையின் தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் வழங்கி வைப்பு



கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள தீயணைப்புச் சேவையின் தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மிக நீண்ட காலமாக தீயணைப்புச் சேவையில் கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் மாகாணத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குற்பட்ட 66 பேருக்கே இந்நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment