உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 11 இலட்சம் ரூபா வரை கடன் - அமைச்சர் மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 11 இலட்சம் ரூபா வரை கடன் - அமைச்சர் மங்கள சமரவீர

க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 11 இலட்சம் ரூபா வரை கடனாக பெற்றுக் கொடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பான வேலைத் திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டில் இளைஞர் சமூகத்தை அறிவுமிக்கதாக கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார். 

நிதியமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் அரச வங்கிகள் மூலம் இந்த கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் 15 வருடங்களுக்கு இதனை மீளச் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அவர்களுக்கு தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பபை மேற்கொள்ள முடியும் என்றும் பின்னர் தொழில் ஒன்றில் ஈடுபட்டதும் கடன்களை மீளச் செலுத்த முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

வருடாந்தம் 2,40,000 மாணவர்கள் உயர் கல்வி சித்தியடைவதுடன் 30,000 பேர் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மேற்படி வேலைத் திட்டம் நாட்டுக்கு மிக அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment