கலாவெவ ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினால் ஏற்பாடு செய்த சுதந்திர தின கொண்டாட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 4, 2019

கலாவெவ ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினால் ஏற்பாடு செய்த சுதந்திர தின கொண்டாட்டம்



இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாவெவ ஜும்மா பள்ளிவாசல நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதே சசபை உறுப்பினர் நளீம், கலாவெவ ஜும்மா பள்ளிக்கு பொறுப்பான மௌலவி, விஜித்தபுர பெளத்த விகாரையின் பிக்கு, இப்பொலோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, ஊர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வின் போது கலாவெவ மையவாடிக்கு செல்லும் பாதையினை புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல்லும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது.

No comments:

Post a Comment