மஸ்கெலியா - மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பின் புரத்திலுள்ள மவுசாகலை நீர்தேக்க கரைபோரப் பகுதியிலே இன்று (04) காலை இவ்வாறு சடலம் மீட்கப்படுள்ளது.
மஸ்கெலியா க்ளென்ட்டில் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக குறித்த மாணவி காணாமல்போயுள்ளதாக, குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment