பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹூர் நகரங்களுக்கு நாளை (28) செல்லும் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவை இதனை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளதன் காரணமாக, குறித்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
கராச்சி மற்றும் லாஹூர் நகரங்களுக்கு நாளைய தினம் (28) விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்தோர், தங்களது பிரயாண முகவர்களிடம் அல்லது தமது இணையத்தளத்தில் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு, பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்புக் கருதி குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், இவ்விடயம் தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்தபோதிலும், பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக அறிவித்துள்ளது.
இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை மேலும் உக்கிரமடைந்துள்ளது. காஷ்மீர் எல்லையில் இன்றைய தினம் இந்திய விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்திருந்ததோடு, தங்களது விமானம் ஒன்று கோளாறு காரணமாக உடைந்து வீழ்ந்ததாக இந்தியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment