மாலியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் பூதவுடல்களும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
பூதவுடல்களைப் பெற்றுக்கொள்வதற்காக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எம்.பீ. ருவன் விஜயவர்தன ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
மாலி நாட்டிற்கு ஐ.நா. அமைதி காக்கும் பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியின் கனரக வாகனங்கள் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தாக்குதலில், கெப்டன் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரினதும் சடலங்களே தற்போது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இத்தாக்குதலின்போது சம்பவ இடத்திலேயே இலங்கை இராணுவத்தின் கெப்டன் ஒருவரும் படை வீரர் ஒருவரும் உயிரிழந்ததோடு, மேலும் மூவர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment