நீர்கொழும்பு, ஹெலிசன் மாவத்தையில் ஆர்பிக்கோ சுப்பர் விற்பனை நிலையத்திற்கு அருகில் நேற்று (11) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு, ஹெலிசன் வீதியைச் சேர்ந்த ஹர்டி துடுவேவத்த (வயது 77) எனும் வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வயோதிபப் பெண், நீர்கொழும்பு ஹெலிசன் மாவத்தை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த வயோதிப பெண் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் நிருபர் ரஸ்மின்
No comments:
Post a Comment