முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார் : மஹிந்த தரப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார் : மஹிந்த தரப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விட்டுக் கொடுக்கவும் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற அரச ஆதரவு கட்சித் தலைவர்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளை அரசாங்கத்திற்குள் இணைப்பது தொடர்பாக அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தீர்மானித்துள்ளது.

அதன்படி ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், தேவைப்படின் தற்போது முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பவர்கள் அவற்றை விட்டுக் கொடுப்பதென்றும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு காண்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment