எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு போலி பிரதமருக்கு ஜனாதிபதி தி;ங்கட்கிழமை வரை காலக்கெடு வழங்கியுள்ளார் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இலஞ்சவிளையாட்டு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது,இலஞ்சம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினரிற்கு யோசித ராஜபக்ச தலைமை தாங்குகின்றார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை முதல் பேரம்பேசல்கள் இடம்பெறுகின்றன ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 3 மில்லியன் டொலர்கள் வழங்குவதற்கு முன்வந்துள்ளனர் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
Prez @MaithripalaS has given till Monday for #FakePM to show 113 in the House. Bribery game is on again with @YoshithaR leading the pack offering as much as USD 3 mn to our MPs this morning. Shame on you all Rajapaksas. #lka @EU_in_Sri_Lanka @USEmbSL @UKinSriLanka @AusHCSriLanka
No comments:
Post a Comment