கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 16 வருடங்களான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமானது கடந்த மாதம் மாத்திரம் 171,475 சதுர மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது.
மனித வலு மூலம் 120,365 சதுர மீற்றர் பரப்பளவிலும், இயந்திர வலு மூலம் 51,110 சதுர மீற்றர் பரப்பளவிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் மனிதாவிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் இலங்கை உட்பட 23 நாடுகளில் தனது கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டை செய்து வருகிறது.
கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையில் குறிப்பாக வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
கனடா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் நிதி பங்களிப்பில் புதிய தொழில்நுட்ப முறைகளை கையாண்டு கண்ணிவெடி அகற்றி வருகிறது.
வட மாகாணத்தை சேர்ந்த 452 ஆண்களும் 296 பெண்களுமாக மொத்தமாக 748 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
No comments:
Post a Comment