2018 தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் மன்னார் மடு வீதி தம்பனைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
அரச அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் விரிவான சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “புனரோதய“ (மறுமலர்ச்சி) தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இலங்கையின் வன அடர்த்தியை 32 சதவீதமாக அதிகரித்தல், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் தாக்கங்களை குறைத்தல் மற்றும் நாட்டை நீலப்பசுமை யுகத்தை நோக்கி கொண்டு செல்லுதல் என்பன இதன் நோக்கமாகும்.
மக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்காக ஒக்டோபர் மாதம் தேசிய மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்பு திணைக்களம் 2018 வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் சுமார் இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
வேப்ப மரக்கன்றொன்றை நட்டு 2018ஆம் ஆண்டிற்கான வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
இதனுடன் இணைந்ததாக பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மரநடுகை நிகழ்ச்சித் திட்டமொன்று இடம்பெற்றதுடன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment