27,176 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

27,176 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

27,176 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த குறைநிரப்பு பிரேரணையில் 9,900 மில்லியன் ரூபா சமுர்த்தி கொடுப்பனவிற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு மீள செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் உயர் கல்விக்கான இலவச போக்குவரத்து பயணச்சீட்டை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இலாபம் ஈட்டாத வீதிகளுக்கான போக்குவரத்து செயற்பாடுகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த குறை நிரப்பு பிரேரணையூடாக 5,246 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக 4,244 மில்லியன் ரூபா இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட பணிகளுக்காக 860 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் முன் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக 853 மில்லியன் ரூபா நிதி இன்று சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் மீள செலுத்துதல், சுவசெரிய திட்டத்திற்கு நிதி ஒதுக்குதல், பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நிர்வாக செலவு, வாகனக் கொள்வனவு, ஆரம்பக்கட்ட பொருளாதார செயற்பாடுகள், அமைச்சர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment