வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பாதாள உலகக் குழுவினருடனான மோதலில் 15 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பாதாள உலகக் குழுவினருடனான மோதலில் 15 பேர் பலி

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பாதாள உலகக் குழுவினருடனான மோதல்களில் 15 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அனைவரும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களென பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த மோதல்களின்போது மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் 52 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment