பிரதி சபாநாயகர் தெரிவின் போது சுதந்திரக் கட்சி சார்பில் பிரேரிக்கப்பட்ட சுதர்சினி பெர்னாண்டோ புள்ளேயிற்கு தமது கட்சி ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் அறிவித்தார்.இருந்த போதும் வாக்கெடுப்பின் போது தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் வெளிநடப்பு செய்த தோடு வாக்கெடுப்பில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
பிரதி சபாநாயகர் தெரிவிற்காக பெயர்கள் பிரேரிக்கப்பட்ட போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், உடன்பாட்டுடன் ஐ.தே.க தரப்பில் சபாநாயகர் நியமிக்கப்பட்டர்.
சுதந்திரக் கட்சிக்கு பிரதி சபாநாயகர் பதவியும் த.தே.கூ பிற்கு குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தெரிவை நாம் ஏற்றோம். நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும். அது தான் சிறந்த சம்பிரதாய முறையாகும். அதனால் சு.க வேட்பாளரை நாம் ஆதரிக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். தனது மனதிலுள்ள நபரின் பெயரை கூறினார். ஆனால் சுதந்திரக் கட்சி பிரேரிக்கும் பெயரை தெரிவு செய்வதே உகந்தது என்றேன். அதனாலே நாம் இன்று சு.க வேட்பாளரை அங்கீகரிக்கிறோம் என்றார்.
இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கருத்து வெளியிட்டதையடுத்து வாக்கெடுப்பிற்காக மணி அடிக்கப்பட்டது. இதன்போது த.தே. கூட்டமைப்பு எம்.பிகள் சபையில் இருந்து வெளியேறினார்கள்.வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரா.சம்பந்தன் சபையில் இருந்து வெளியேறினார்.
ஷம்ஸ் பாஹிம். மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment