களனி பல்கலைக்கழகத்தில் தாபிக்கப்படவுள்ள சிறுநீரக நோய் தடுப்பு ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

களனி பல்கலைக்கழகத்தில் தாபிக்கப்படவுள்ள சிறுநீரக நோய் தடுப்பு ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

களனி பல்கலைக்கழகத்தில் தாபிக்கப்படவுள்ள சிறுநீரக நோய் தொடர்பான தகவல் மற்றும் ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது.

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம்.சமரசிங்ஹ ஆகியோர் இவ்ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

களனி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுநீரக நோய் தொடர்பான ஆய்வு நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்புதல், சிறுநீரக நோய்க்கான காரணத்தை கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஏனைய தேசிய மற்றும் சர்வதேச தரப்பினருடன் இணைந்து குறித்த ஆய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், சிறுநீரக நோயை தவிர்ப்பதற்கு தேவையான கொள்கைகள் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல் இந்த மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment