வலி வடக்கில் படையினர் வசமிருந்த 33 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

வலி வடக்கில் படையினர் வசமிருந்த 33 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மேலும் ஒரு தொகுதி காணி மக்களிடம் மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது

யாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் படையினரின் வசமிருந்த சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கு, பளை வீமன்காமம் பகுதிக்குட்பட்ட ஜே/ 236 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இக் காணிகள் கடந்த 28 வருடங்களின் பின்னர் பொதுமக்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது இப் பகுதியில் 17 வீடுகள் எதுவித சேதங்களுமின்றி காணப்படுவதுடன் மேலும் சில வீடுகள் சிறு சேதங்களுடன் காணப்படுகின்றன. 

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் செல்வதற்கு நேற்றையதினம் அனுமதிக்கப்பட்டதுடன் காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தெல்லிப்பளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.

No comments:

Post a Comment