இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி இன்று அதிகாலை 12.45 அளவில் புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் மதிலொன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சைகளை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்னர். எனினும் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment