ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்று (06) இரண்டாவது நாளாக இடம்பெறுகிறது.
நிறுவன பதிவாளர் மற்றும் அதிகாரி ஒருவரும் சாட்சி விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே கூறினார்.
குறித்த இருவரிடமும் கடந்த 04ம் திகதியும் சாட்சி பதிவு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அனில் குணரத்ன, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எதாஉட ஆரச்சிகே, காமினி ரொஹான் அமரசேகர, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் மல்லவ ஆரச்சிகே டொன் என்டனி ஹரல்ட், இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணி்ப்பாளர் நாயகம் வசந்தா ஜயசீலி கபுகம ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment