அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில் அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் (5) திறந்து வைத்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனம் (SLITA) இப்பயிற்சி நிலையத்தை அமைக்க உதவியுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், கல்னேவ அ.இ.ம.கா (ACMC) பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ், இப்பலோககம அ.இ.ம.கா (ACMC) பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் சஹீட் ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment