வடக்கு முதலமைச்சரை சந்தித்தார் நடிகர் கருணாஸ் - News View

About Us

Add+Banner

Breaking

Friday, April 6, 2018

demo-image

வடக்கு முதலமைச்சரை சந்தித்தார் நடிகர் கருணாஸ்

Comedian-actor-Karunas-meets-Northern-Chief-Minister-3
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நகைச்சுவை நடிகரும் தமிழக சட்ட சபையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்சருடான சந்திப்பு நிறைவடைந்ததும் கிளிநொச்சியில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Comedian-actor-Karunas-meets-Northern-Chief-Minister-1
Comedian-actor-Karunas-meets-Northern-Chief-Minister-2

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *