நாட்டு மக்கள் வழங்கிய ஆணையை அரசாங்கம் பூர்த்தி செய்யும் வகையில் வலியுறுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் தமது செயற்பாடு அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுன்றத்தில் இடம்பெற்றுவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நாட்டு மக்கள் வழங்கிய ஆணை தொடர்பில் மிகவும் தெளிவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதனை நிறைவேற்ற வேண்டும். எனினும், அது தொடர்பான செயற்பாடுகள் குறித்து தாம் அதிருப்தி கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அந்த ஆணை நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக 2 ஆண்டுகள் இந்த அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கின்றது.
எனவே, நாட்டு மக்கள் வழங்கிய ஆணையை அரசாங்கம் பூர்த்தி செய்வதற்கான இடைவெளியை வழங்கும் முகமாக இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தமது செயற்பாடு அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கம் கிட்டத்தட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை, 2 ஆண்டுகள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்தது.
எனினும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் உணவுப் பொதியையோ வேறு இதர வழங்கியவர்களை தற்போதைய அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. ஆயுத மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களையும், நீண்ட காலமாக தடுப்பில் உள்ளவர்களையும் விடுவிக்க முடியாது?
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்ததை உங்களால் செய்ய முடியாதுள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவதாக கூறப்பட்ட போதும், அது எவ்வளவு காலமாக அமுலில் உள்ளது என்றும் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment