வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் தண்ணீர் பவுசர்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார். கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் அண்மையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நீர்வழங்கல் சேவையை தொடர்ந்து உரிய பிரதேச சபைகளிற்கு ஊடாக அந்தந்தப் பிரதேசங்களுக்கு வழங்கும் நோக்கத்திற்காக நான்கு தண்ணீர் பவுசர்கள் முதலமைச்சர் அமைச்சிற்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், முதலமைச்சர் அமைச்சின் பிரதமகணக்காளர் திரு.பி.ஜெயராஜா, கணக்காளர் திரு.ஆ.கிரிதரன், வடமாகாண விவசாய அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் திரு.மே.சாந்தசீலன் மற்றும் அமைச்சுக்களின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment