நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் 100 வயதினை கடந்த 250 வயோதிபர்கள் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில், அவர்களது வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்யும் நோக்கில், 100 வயதினை கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
இதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலனோம்புகை மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment