இலங்கையின் சில பகுதிகளில் பேரினவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித் தாகுதல்களுக்கும் உடமைகளை தீ இட்டு கொழுத்தி நாசம் செய்வதற்கும் எதிர்ப்புத் தெறிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கர்தால் அனுஷ்திக்கப்படுகிறது.
இன்று (06) அதிகாலையில் பிரதான வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் எரிக்கப்பட்ட டயர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேட்கொண்டதுடன் வீதிகளில் ஆங்காங்கே போலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஹ்த் ஜுனைட்
No comments:
Post a Comment